பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி 143

ஆளுடைய பிள்ளை உமையொருபாகனை ஊர்தொறும் சென்று வழிபட்டு வருகையில் அவருக்கு உபநயனம் செய்விக்கும் பருவம் வந்தடைந்தது. பெற்றோரும் உறவினரும் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர். தெய்வத் தன்மை திகழும் நன்னாளில் சம்பந்தருக்குப் பூணுரல் அணிவித்து உபநயனம் செய்யப்பெற்றது. சம்பந்தர் அவ்வமயம் மறையவர்க்கும், உலகோர்க்கும் ஆன்மாவை உய்விக்கக்கூடிய உ ண் ைம ப் பொருளை உணர்த்த விழைந்தார். அவ்வுண்மைப் பொருள் பஞ்சாக்கரமாகும்.” சிவபெருமானின் ஐந்தெழுத்தையே (சிவாயநம) உண்மைப் பொருளாக அவர் உரைத்தார். அதற்காக ஒரு பதிகம் பாடினார். அது பஞ்சாக்கரத் திருப்பதிகம் என்று அழைக்கப் பெறுகிறது.

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து கினைமின் நாள்தொறும் வஞ்சக மற்று அடி வாழ்த்த வந்த கூற் றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே

(பதிகம் 280 பாடல் 1)

என்னும் இப்பதிகப் பாடலில் திருவைந்தெழுத்தை எப்போதும் சிந்தை செய்து வந்தால் கூற்றுவன் அஞ்சுமாறு உதைத்து மீளலாம் என்னும் கருத்து வலியுறுத்தப்படுகின்றது. சம்பந்தரின் இப்பாடலைக் கேட்ட மறையவர் தாம் நாள் தோறும் செய்யும் அந்திக்கால பூசையினை அஞ்செழுத்து ஒதிச் செய்ய வேண்டும் என உணர்ந்தமையும் இப்பதிகத்தின் வாயிலாக அறிய முடிகின்றது.

இந்நிகழ்ச்சி நடந்த சில நாள் கழித்து அப்பர் பெருமானின் தொடர்பும் நட்பும் சம்பந்தருக்குக் கிடைத்தன. அப்பரைத் தம் ஊரில் கண்டு வீட்டிற்கு அழைத்து விருந்து நல்கிச் சிறப்பித்தார். பின்னர் இருவரும் இறைவன் புகழ் பரப்ப வேண்டித் தனித்தனியே பயணம் மேற்கொண்டனர்.