பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

இவ்வாறு பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டு வருகையிலே அவருக்குப் பல அரிய ஆற்றல்கள் கைகூடின. எவராலும் செய்ய இயலாத செயல்களைத் தம் அருள் வலிமையால், இறைத் தன்மையால் செய்து காட்டினார். அவ்வாறு அவர் ஆற்றிய அருஞ்செயல்களுள் சிலவற்றை யேனும் அறிந்து இன்புறல் நலம் பயக்கும்.

திருப்பாச்சிலா சிராமம் என்னும் ஊர் சோழநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. அங்கே கொல்லி மழவன் என்னும் ஒர் அரசன் இருந்தான். அவனுக்கிருந்த ஒரே பெண்மகளை ‘முயலகன்’ என்னும் கொடுநோய் பிடித்திருந்தது. அவளது நோயைத் தீர்க்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயின், நோய் தீராது தொடர்ந்து தொல்லை தந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வூரைச் சென்றடைந் தார் சம்பந்தர் பெருமான். கொல்லி மழவன் சம்பந்தரை வணங்கி, தனக்கேற்பட்டிருக்கும் துயர நிலையைக் கூறினான். சம்பந்தர் சிவபெருமானை மனத்துள் எண்ணி அப்பெண்ணின் துயரைத் தீர்க்குமாறு வேண்டி,

துணிவளர்திங்கள் துளங்கி விளங்கச்

சுடர்ச்சடை சுற்றிமுடித்து பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ

வாரிடமும் பலிதேர்வர் அணிவளர்கோல மெலாஞ்செய்து பாச்சி

லாச்சிரா மத்துறைகின்ற மணிவளர் கண்டரோ, மங்கையைவாட

மயல் செய்வதோ இவர்மாண்பே

(பதிகம் 44 பாடல் 1) என்னும் பாடலைப் பாடினார். இம்மங்கை வாடும்படி மயல் செய்வதுதான் நினது மாண்போ’ என வினவி அவ்வூர் இறைவனைப் பத்துப் பாடல்களில் பாடிப்பரவினார். உடனே அப்பெண்ணின் பிணி நீங்கிற்று. கொல்லி மழவனும்