பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் I 45

மகிழ்வெய்திப் புதல்வியோடு சேர்ந்து ஞானசம்பந்தப் பெருமானை வணங்கி வாழ்த்தினான்.

ஞானசம்பந்தரின் தந்தை ஒரு நாள் தம் பிள்ளையை நோக்கி வேள்வி செய்யும் காலம் நெருங்கிவிட்டது. அதற்குப் பொருள் தேவை எனக் கேட்டார். சீகாழி வள்ளலாகிய சம்பந்தர் உடனே கோயிலுக்குச் சென்று தந்தையின் வேள்விக்குப் பொருள் அ ளி க் கு மாறு இறைவனை வேண்டினார்.

வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏசலிலையே

இறைவ ராயினிர், மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே.

(பதிகம் 92 - பாடல் 1,2)

என்னும் பாடல் பாடி வேண்ட, இறைவனும் அவருக்கு அருள் புரிந்தான். திருவீழிமிழலையாற் குடிகொண்ட இறைவன் ஒரு பூதத்தை அனுப்பி, பொற்கிழியொன்றைச் சம்பந்தர்க்கு வழங்கினான். இவ்வாறு பொருள் கேட்டுப் பாமாலை பாடியவுடனே இறைவன் அவரது வேண்டுகோளை ஏற்று அருள்புரிந்த நிகழ்ச்சி சம்பந்தரின் இறைத் தன்மையை ஒர்தற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

தந்தையின் வேள்விக்குப் பொருள் வேண்டி மீட்டும் ஒருமுறை திருவாவடுதுறை அமர்ந்த ஈசனை நோக்கிச் சம்பந்தர்,

இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோவெமை யாளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருளாவடுதுறை யரனே

(பதிகம் 262 - பாடல் 1)

மண்-10