பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 46 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

என்ற பாடலைப் பாடினார். என்னிடம் பொருள் கேட்டு வருவார்க்குக் கொடுப்பதற்கென்று ஏதும் இல்லை; அவ்வாறு இருப்பினும் அது உன் திருவடியே தவிர வேறெது வும் இல்லை’ என்னும் பொருளை அமைத்து இப்பாடலைச் சம்பந்தர் பெருமான் பாடினார். சிவனின் செய்ய கருணை யால் சிவபூதம் ஒன்று பலிபீடத்தின்மீது பொன் நிறைந்த கிழி ஒன்றை வைத்து இவ்வுலவாக் கிழி யுமக்கிறைவன் நல்கியது என்று கூறிச் சென்றது. சம்பந்தர் அக்கிழியினைத் தம் தந்தையிடம் கொடுத்து, வேள்வியை நடத்தும்படிச் செய்தார்.

அடுத்து, திருமருகல் என்னும் ஊரில் வணிகன் ஒருவனின் விடந்தீர்த்து அவன் விரும்பிய பெண்ணை மணமுடித்து வைத்த நிகழ்ச்சி, சம்பந்தரின் அருட்செயல் களுள் சிறந்த ஒன்றாகப் ேபா ற் ற ப்ப டு கி ன் ற து. வைப்பூர் என்ற ஊரைச் சேர்ந்த தாமன் என்பவன் மருகனாகிய வணிகனுக்குத் தன் பெண்களைத் தருவதாகக் கூறியிருந்தான். ஆனால் அவனுக்கிருந்த ஏழு பெண்களுள் ஆறுபேரை வேறுவேறு ஆண்களுக்கு மணமுடித்துத் தம் வாய்மொழியைப் பொய்யாக்கினான். இதனை உணர்ந்த அவனது ஏழாவது பெண் பெற்றோரை விட்டுப் பிரிந்து, வீட்டை விட்டு விலகி வணிகன் துணையோடு வெளியூர்க்குப் பயணமானாள். திருமருகலை அவர்கள் அடைந்து வழிநடைத் துயரைப் போக்கியிருந்த வேளையில் பாம் பொன்று வணிகனைத் தீண்ட அவன் இறந்து விடுகின்றான். உடனே அப்பெண், தனக்குநேர்ந்த அவலத்தை நினைந்து வருந்தி * அன்னையையும் அத்தனையும் நீக்கி உன்னோடு வந்தேன். நீயும் இப்போது பிரிந்து விட்டாய், இனி நான் என் செய்வேன்’ என அழுது அரற்றுகின்றாள். அவ் அழுகையைக் கேட்டு அங்கே வந்த சம்பந்தப் பெருமான் உண்மை நிலையைக் கேட்டறிந்து இறைவனிடம் வணிகனின் விடம் நீக்கி அவனை உயிர்ப்பிக்குமாறு வேண்டினார்.