பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I of 8 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

வேயுறுதோளி பங்கன் விட முண்டகண்டன்

மிகால்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிக்தென்

உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்லவவை கல்லகல்ல

வடியா ரவர்க்கு மிகவே.

(பதிகம் 221 பாடல் 1)

என்பது சம்பந்தர் பாடிய பாடல். இதில் அடியவர்களுக்கு எந்த நாளும் நல்ல நாளே. திங்களைச் சடையிலே அணிந்துள்ள சிவபெருமான் நம் உள்ளத்தில் புகுந்திருப்பதால் நமக்கு எல்லா நாளும் நல்ல நாளே என்னும் கருத்து அமைந்து சம்பந்தரின் இறை நம்பிக்கை உணர்வைச் சிறப்பிக்கக் காணலாம்.

சம்பந்தரின் அருட்செயல்களுள் சிறப்புடையதாக அவர் மதுரையம்பதியில் ஒரு பெரும் பேரரசையே சைவநெறியில் செலுத்தியது போற்றப்படுகின்றது. தி ரு வ ர ல வ ா ய் அண்ணலின் அருட்கருணைப் பெருவெள்ளத்தில் தம்மை மறந்து அவர் பாடிய பாடல்கள் விழுமிய ஒசையும் ஆழ்ந்த பொருளும் கொண்டிலங்குகின்றன.

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி

பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதங்ா யகன் நால்

வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த

ஆலவா யாவது மிதுவே.

(பதிகம் 378 - பாடல் 1)