பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் 149

என வரும் பாடலில் ஒசையினிமை சிறந்திருக்கக் காணலாம். மேலும் சம்பந்தர் வாழ்ந்த காலத்தில் அரசோச்சிய மன்னனின் வாழ்க்கைத் துணையாகிய மங்கையர்க்கரசியார் இத்திருவாலவாய் இறைவனைப் பணிசெய்து போற்றிய பாங்கு இப்பாடலில் இடம் பெறுவதையும் காணமுடிகின்றது. இதிலிருந்து பாண்டியன் மனைவி சைவநெறி பரப்புவதில் துணை நின்றாள் என்னும் வரலாற்றுக் குறிப்பினையும் நாம் அறிகின்றோம்.

ஆலவாய் அழகரின் அருட்செயலை வியந்து போற்றி வனங்கி மதுரையின் நகர்ப்புறத்தே வந்தார் சம்பந்தர். அங்கே, மன்னன் கூன் பாண்டியன் வைப்பு நோயால் உழன்று வருந்துவதை அவனது இல்லத்தரசி மங்கையர்க்கரசியாரின் வாயிலாக அறிந்தார். அரசியார் மன்னனின் நோயைத் தீர்க்குமாறு வேண்டினார். அருள்நெறியண்ணலாம் சம்பந்தப் பெருந்தகை அரசியின் வேண்டுகோளை ஏற்று, மன்னனின் உடலில் திருநீறு பூசி,

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயன்திருநீறே

(பதிகம் 202 - பாடல் 1)

என்னும் இப்பாடலைப் பாடி நோயைத் தீர்த்தார். இப் பாடலின் வாயிலாகத் திருநீற்றின் பெருமையை, உலகோர்க்கு உணர்த்தியுள்ளார் ஞானசம்பந்தர்.

பாண்டி நாட்டுத் திருத்தலங்களை வழிபட்ட பிறகு சம்பந்தர் சோழ நாட்டை நோக்கிப் பயணம் மேற் கொண்டார். பிள்ளையுடனே வருவதாக வேண்டினர். சம்பந்தர், அவர்களிடம் இங்கிருந்தே சைவப் பயிரை வளருங்கள்’ என்று கூறி விடை பெற்றார். சோழ நாட்டை அடைகையில் முள்ளிவாய்க்கரை என்னும் ஊரின் கண்ண