பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 50 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

தாகிய ஆற்றில் பெருவெள்ளம் பாய்ந்து சென்றது. ஆற்றின் அக்கரையில் திருக்கொள்ளம்பூதுார் ஆலயம் அமைந்திருக்கக் கண்ட சம்பந்தர் அவ்வூர் சென்று வழிபட எண்ணினார். ஆற்றைக் கடந்தால்தான் அக்கரைக்குச் செல்ல முடியும். ஒடங்கள் ஆற்றின் கரையில் இருந்தன. வெள்ளப்பெருக்கு மிகுதியாக இருந்ததால் ஒடக்காரர் ஒடங்களை அங்கேயே நிறுத்திவிட்டுப் போப் விட்டனர். கொள்ளம்பூதுரர் இறைவனை வழிபட வேண்டும் என்னும் ஆவல் மீதுாரலால் சம்பந்தர் தாமே ஒடம் செலுத்த முடிவு செய்தார். அங்கி ருந்த ஒர் ஒடத்தில் அடியவரை ஏற்றிக் கொண்டு, தாமும் அதிலேறி இறைவனை வணங்கி,

கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதுர் நட்டம் ஆடிய நம்பனை யுள் கச் செல்ல வந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.

(பதிகம் 264 - பாடல் 1)

என்னும் பாடலைப் பாடினார். ஒடம் எவ்வித இன்னலுமின்றி அக்கரையை அடைந்தது. அனைவரும் சம்பந்தரின் அருள் வலிமையை எண்ணி வியந்தனர்.

அடுத்து, திருவோத்துார் என்ற ஊரில் ஒரு சிவபக்தர் இருந்தார். அவர் சிவபெருமானுக்காகப் பனைமரங்கள் வைத்து வளர்த்தார். அப்பனைகள் ஆண்களாகிக் காய்க்கா திருந்தன. மாற்றுச் சமயத்தினர் சிலர் அச் சிவபக்தரை நோக்கி சிவனருளால் உன் ஆண் பனைகளைக் காய்க்குமாறு செய்ய முடியுமா?’ என வினவினர். அதைக் கேட்டு வருந்திய சிவபக்தர், திருவோத்துாருக்கு எழுந்தருளியிருந்த சம்பந்த ரிடத்தில் தமது மன வருத்தத்தைக் கூறினார். அன்பரின் வருத்தம் போக்கிடத் துணிந்தார் ஆளுடைய பிள்ளை. உடனே, சம்பந்தர்,