பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் 7.

இலக்கியமும் இருக்க முடியாதுதான். ஆயினும் சங்க இலக்கியத்தின் தனித்தன்மை யாது? எனக் கேட்பின் ‘மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படுவர்’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளபடி பெண்மையின் மென்மை போற்றி, பெண்ணின் பெருந்தக்கன வான பண்புகளைப்பலபடப் பாராட்டிப் பேசும் உளப்பாங்கு உணர்த்தவல்ல உயர் பேரிலக்கியங்களாகச் சங்க இலக்கியங் கள் துலங்குகின்றன எனலாம். காட்டொன்று காண்போம் :

பெண்மகவு பிறந்த ஞான்றே பின்னாளிற் தரப்போகும் சீர்வரிசையை எண்ணிக் கலக்கமுறும் பெற்றோர்கள் இன்று பலர். ஆனால் அந்நாளில் பெண்மகவு வேண்டும் என்று ஒரு குன்றக் குறவன் தவமிருந்து ஒரு பெண்மகவுக்குத் தந்தை யாகின்றானாம். இவ்வரிய உயரிய செய்தியை ஐங்குறுநூறு உணர்த்தும்.

“குன்றக் குறவன் கடவுட் பேணி

இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள்.'”

இதுபோன்றே நல்கூர்ந்தார் செல்வ மகளான ஒரு பெண்ணிற்கு, அவளைக் கண்ணின் இமையெனக் காத்தோம்பி வளர்க்கும் முதுமையும் வாழ்க்கையின் அனுபவ முதிர்ச்சியும் ஒருங்கே கூடிய செவிலித்தாயர், தம் ஒரு கையில் பொற்கலமும் அப் பொற்கலத்தில் தேன்கலந்த பாற்சோறும். மறு கையில் விளையாட்டாக அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் சிறுகோலும் கொண்டு, உணவூட்ட முற்படுகிறாள். பசியறியாது விளையாட்டயர்ந்து நிற்கும் அச்சிறு பெண் தன் கால்களில் அணிந்திருக்கும் முத்துக்கள் பதித்த பொற்சிலம்பு கலீர் கலீர் என ஒலிக்க மல்லிகைப் பந்தர்க் கீழ் ஒடிஓடி ஒளிந்து, அத்தாயர் நடை தளர, முயற்சி மெலிய ஏவல் மறுக்கிறாள். ஆனால் அந்த நாள்கள் கழிந்து போயின. சிறுமி வளர்ந்தாள். வயது நிறைந்தாள்; மனச்