பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் I 5.1

பூத்தேர்ந் தாயன கொண்டுகின் பொன்னடி ஏத்தா தார் இல்லை எண்ணுங்கால் ஒத்துர் மேய ஒளிமழு வாள் அங்கைக் கூத்தி ரும்ம குணங்களே.

(பதிகம் 54 - பாடல் 1)

என்று பாடத் தொடங்கி,

குரும்பை யாண்பனை யின்குலை யோத்துார் அரும்பு கொன்றை யடிகளைப் பெரும்பு கலியுண் ஞானசம்பந் தன்சொல் விரும்பு வார்வினை வீடே.

(பதிகம் 54 - பாடல் 11)

என்று முடிக்கையில் அச் சிவபக்தரின் ஆண் பனைகள் பெண் பனைகளாக மாறி காய்த்துக் குலை சாய்த்திருந்தன. இவ்வாறு ஆண் பனைகளாக இருந்தவற்றைத் தம் அருளாற்றலால் பெண் பனைகளாக மாற்றியதுடன், சிவபக்தரின் வருத்தத்தையும் போக்கினார். இப்படிச் சம்பந்தரின் திருவருள் செயல்கள் பல நிகழ்ந்தமை அறிகின்றோம். இறுதியாகச் சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய நிகழ்ச்சி அனைவரும் அறியவேண்டிய ஒன்றா கும். மயி லாப்பூரில் சிவநேசர் ஒருவர் தமது மகளுடன் வாழ்ந்து வந்தார். அவரது மகள் ஒரு நாள் நந்தவனம் சென்றபோது பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளது மறைவு கேட்டுப் பெரிதும் வருத்தமுற்ற சிவநேசர் என் பெண்ணை உயிர்ப்பித்து எழச் செய்பவர்களுக்குப் பெரும் நிதி தருவேன்’ என அறிவித்தார். சிலர் முயன்றனர். எவராலும் அப்பெண்ணை உயிர்ப்பிக்க இயலவில்லை. சிவநேசர் மகளை முறைப்படி எரியூட்டி அவளது எலும்பை யும் சாம்பலையும் ஒரு குடத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். திருஞானசம்பந்தர்க்கே இவள் உரியவள். அவர் வரும்வரை இவ்வாறு பாதுகாத்து வைப்பதே நல்லது என்ற எண்ணத்தில் சிவநேசர் இருந்தார். அவர் எண்ணியவாறே சம்பந்தரும் வந்தார்; அடியார்கள் வாயிலாகச் சிவநேசர்