பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 52 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

உற்ற துயரினை அறிந்தார். எலும்பும் சாம்பலும் நிறைந்த குடத்தைக் கொண்டுவரச் செய்தார். அவ்வெலும்பைப் பெண்ணாக்கும் முயற்சி வெற்றி .ெ ப ற வே ண் டிச் சிவபெருமானை வணங்கி,

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான்கபாலிச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

(பதிகம் 183 - பாடல் 1)

என்ற பதிகத்தைப் பாடத் தொடங்கினார். பதிகம் முடிந்தவுடன் எலும்பு பெண்ணாக உயிர்பெற்று எழுந்தது. அப்பெண்ணைச் சிவநேசரிடம் ஒப்படைத்தார் சம்பந்தர். பின்னர் அச்சிவநேசர் தம் பெண்ணை மணந்து கொள்ளுமாறு சம்பந்தரை வேண்ட, அவர் இவளைச் சிவனருளால் நான் தோற்றுவித்தேன். எனவே இவளை நான் மணத்தல் முறையன்று என்று கூறித் தம் ஊரை நோக்கிப் புறப்பட்டார்.

சம்பந்தர் சீகாழிப் பதியை அடைந்தவுடன் அவருக்குத் திருமணம் செய்விக்க முயற்சிகள் நடந்தன. திருநல்லூரி லுள்ள நம்பியாண்டார் நம்பி என்பாரின் மகளை ஆளுடைய பிள்ளைக்கு உரிய மணமகள்ாகத் தேர்ந்தெடுத்தனர். நம்பியாண்டார் நம்பி இதனை அறிந்து பெருமகிழ்வுற்றார். குறிப்பிட்ட நாளில் சம்பந்தர் நம்பியாண்டார் நம்பியின் மகளைக் கைப்பிடித்தார். தீயை வலம் வந்து வணங்கும் வேளையில் சிவனொடு இரண்டறக் கலக்க விரும்பினார் சம்பந்தர். “உனது திருவடி நிழலை அடையும் தருணம் இதுவே என்று இறைவனிடம் வேண்டினார். இறைவனும் அவர் விருப்பத்தை அறிந்து ஞான சம்பந்தனே! நீயும் உன் மனைவியும் திருமணம் காண வந்த மக்களும் இச்சோதியி னுள்ளே வந்து சேருங்கள்’ என்று திருவாய் மலர்ந்தார். இறைவன் திருக்கோயில் முழுதும் சோதி மயமாக்கினார். அதன் கண் ஒரு வாயிலையும் இறைவன் அமைத்தார். அப்பொழுது, சம்பந்தர்,