பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் I53

காதலாகிக் கசிந்துகண் ணிர்மல்கி

ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பதும்

வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவதும்

நாதன் நாமம் நமச்சி வாயவே.

(பதிகம் 307 - பாடல் 1)

என்ற பாடலைப் பாடி, சுற்றத்தினருடன் அச் சோதியிற் கலந்தார்.

திருஞானசம்பந்தரின் வாழ்க்கையிலிருந்து நாம் இரண்டு உண்மைகளை அறிய முடிகின்றது. ஒன்று, அவர் இறைவனுடைய புதல்வர் என்னும் பெருந்தகுதியைப் பெற்றவர். இரண்டாவது, அவர் தமக்கென்று வாழவில்லை. பிறருக்கு உதவும் நோக்கிலேயே அவரது வாழ்க்கை அமைந்தது. அடுத்து இறைவன் சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கியது முதல் சோதியில் இணைத்துக் கொண்டது வரை யில் அனைத்தையும் தாமாகவே அருள் செய்தார்; எதையும் சம்பந்தர் இறைவனிடம் கேட்டதில்லை. அப்படி அவர் கேட்டதெல்லாம் அ வ ரு க் கா. க க் கேட்டவையல்ல; பிறருடைய குறை போக்க வேண்டியே அவர் இறைவனிடம் பல வேண்டுதல்களைச் செய்தார்.

இவ்வாறு தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த சம்பந்தரின் பாடல்களில் காணப்பெறும் சில நெறிகளையும் நாம் அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது ஆகும். சம்பந்தரின் பாடல்களில் அகப்பொருள் நெறியும், இயற்கையை வருணிக்கும் நெறியும், வாழ்வியல் உண்மைகள் சிலவற்றை எடுத்துரைக்கும் நெறியும் அளவாகவும் அழகாக வும் அமைந்து இலக்கிய இன்பத்தை ஊட்டக் காணலாம்,

தமிழ் இலக்கிய மரபில் அகப்பொருள் குறிப்பிடத்தக்க இடத்தை இன்றளவும் வகித்து வருகிறது. தொல்காப்பியர் உருவாக்கிய அகமரபு அன்பின் ஐந்திணையோடு நின்றுவிட வில்லை. அது பக்தி இலக்கியக் காலத்திலும் தொடர்ந்தது. இன்னும் சொல்லப் போனால் பக்தி இலக்கியக் காலத்தில்