பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 54 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

தான் அகப்பொருள் மரபில் புதுமைகள் நிகழ்ந்தன. இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் நினைந்து புலவர்கள் அகப்பாடல்கள் பலவற்றைப் பாடினர். நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தப் பெருமானும் அத்தகு பாடல் கள் சில பாடியிருக்கக் காண்கிறோம். இவற்றை நாயகி நாயகி பாவத்தில் அமைந்த பாடல்கள் என்று குறிப்பர்.

ஆளுடைய பிள்ளையாம் நம் சம்பந்தர் முதன்முதலாகப் பாடிய திருப்பதிகமே நாயகி நாயகி பாவத்தில் அமைந்த அகப்பாடலாகும். தோடுடைய செவியன்’ எனத் தொடங்கு கின்ற அந்தப் பாடலில் என் உள்ளங்கவர் கள்வன்’ எனவரும் தொடர் தலைவி ஒருத்தி கூறுவது போன்று அமைந்துள்ளது என்று குறிப்பிடுகின்றனர். மூன்றுவயதே யாகிய நிலையில் நம் முத்தமிழ் விரகர் பாடிய முதற்பாடலே அகப்பொருள் அமைதி சான்றதாய் இலங்குவதை எண்ணி அறிஞர்கள் வியந்து போற்றுவர்.

சங்க இலக்கியங்களில் தலைவி அஃறிணை உயிர் களிடத்துப் பேசி, தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் நிலை காணப்படுகின்றது. மேலும் சில பாடல்களில் அஃறிணை உயிர்களைத் தலைவி தூதாக அனுப்பும் பாங்கும் காணப்படு கின்றது. அந்த மரபை ஞானசம்பந்தரும் பின்பற்றுகின்றார். “கிளியைவிளித்து, தோணி புரத்தில் குடி கொண்டிருக்கும் ஈசனின் திருநாமத்தைக் குறித்து என்னிடம் பேசுவாயாக, நான் உனக்குத் தேனும் பாலும் உண்ணத் தருவேன்’ என்று சம்பந்தர் பேசுவதாக ஒரு பாடல் தேவாரத்தில் இடம் பெற்றிருக்கின்றது.

சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத் தருவன் மொய்பவளத் தொடு தரளம் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே.

(பதிகம் 60 - பாடல் 10)