பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்ல வண்ணல் வாழலாம் I 55

என்பது சம்பந்தரின் பாடல். இதில் கிளியை விளித்து அதனிடம் பேசும் நிலையும், தன்னை நாயகியாகவும் , தோணிபுரத்தீசனை நாயகனாகவும் கருதும் நிலையும் இடம் பெற்றிருக்கின்றன.

திருமாலை வழிபடும் திருக்கூட்ட மரபில் வந்த ஆழ்வார் களுடைய பாடலிலும் இத்தகு அகப்பொருள் நெறி அமைந்து சிறக்கக் காணலாம். திராவிட வேதம்’ எனச் சிறப்பித் துரைக்கப்படும் திருவாய்மொழியினை அருளிச் செய்த நம்மாழ்வாரின் பாடலொன்றில் தலைவி, காதல் வேட்கை மிகுதியானதால் ஆற்றாதவளாகி, தான் வளர்த்த பூவை யிடம் தன்னையும் தலைவனாம் திருமாலையும் இணைத்துப் பேசும் பாங்கு புனையப்பட்டுள்ளது.

சிறுபூவையே! நெடுமாலாரிடம் என் காதல் நோயைத் தெரிவிக்குமாறு உன்னைக் கேட்டேன். நீயோ அவரைச் சந்தித்து என் நிலை உரைக்காது விட்டாய்; அதனால் உடலும் உள்ளமும் நைந்தன. உனக்கு இனிமை நிறைந்த உணவை ஊட்டும் சக்தியையும் இழந்து நிற்கிறேன். இனிமை நிறைந்த உணவை ஊட்டும் சக்தியையும் இழந்து நிற்கிறேன். ஆகையால், நீ வேறு இடம் சென்று உணவைத் தேடிக்கொள்

எனத் தலைவி ஆற்றாமை வெளிப்பட நாகணவாய்ப் புள்ளிடம் மொழிகின்றாள்.

நீ அலையே சிறுபூவாய் நெடுமாலார்க்கு என்து தாய் நோய்எனது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய் சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனிவுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே.

(நாலாயிர திவ்விய பிரபந்தம் - 27.15)