பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 56 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

என்பது நம்மாழ்வார் அமைத்த, அகப்பொருள் நெறிசார்ந்த பாடல். இதில் தலைவி தன்நிலை தடுமாறி, திருமாலின் நினைவொன்றிலேயே திளைத்து நிற்கும் பாங்கு வெளிப் படுகின்றது.

திருநாவுக்கரசரும், தலைவி நிலையில் நின்று இறைவனைத் தலைவனாக எண்ணிப் பல பாடல்களைப் புனைந்துள்ளார். அவற்றுள் தலைவி தன்னை முற்றிலுமாக இழந்து தலைவனின் திருப்பாதங்களே சரண் என அவனோடு ஒன்றிவிட்ட நிலையைச் சித்திரிக்கும் பாடல் குறிப்பிடத்தகுந்தது.

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

மூர்த் தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந் தாள் தன் நாமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

என்னும் அப்பர் பெருமானின் பாடல், இறைவனின் இணையடிகளோடு இயைந்த தத்துவ நிலையை, தலைவனும் தலைவியும் கலந்தனர் என்னும் அகமரபின் அடிப்படையில் விளக்குகின்றது. நம்மாழ்வார், அப்பர் பெருமான் ஆகியோர் பாடியுள்ள இப்பாடல்கள் ஞானசம்பந்தரின் அகப்பொருள் தன்மை சார்ந்த பாடல்களுடன் ஒப்புமையுடையனவாய் விளங்குகின்றமை அறிந்து மகிழ்தற்குரியது.

அடுத்து, திருவாரூர்ப் பதிகத்தில் அமைந்துள்ள பாடல் களில் தலைவியின் ஏக்க உணர்வு வெளிப்படுவதைத் காண முடிகின்றது. தலைவன் பிரிந்து சென்றதால் ஆற்றாமை