பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I58 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

என்னும் இப்பாடலில் தாமரை மலர்கள் மாதர்களின் முகத்தழகைக் காட்டுகின்றன; செவ்வல்லி மலர்கள் அவர்தம் வாயின் அழகைக் காட்டுகின்றன; காவி, கரிய குவளை, கருநெய்தல் ஆகிய மலர்கள் பெண்டிர்தம் கண்களின் அழகைக் காட்டுகின்றன என ஒப்புமைப் பண்பு ஒளிர்வதுடன் இயற்கைவளம் நம் கண் முன்னே படமாக விரிவதையும் காணலாம் .

சம்பந்தரின் பாடல்களில் மந்திகளின் (குரங்கின்) செயல் விதந்து பாடப் பட்டிருத்தலைக் காணமுடிகிறது. இயற்கையை விவரிப்பதுடன், திருவையாறு பதிகத்தில் உள்ள பாடல் ஒன்றில் மந்தியின் செயல் நம்மை மகிழ்விக்கும் வண்ணம் சம்பந்தர் .ெ ப. ரு ம .ா ன ல் புனையப்பட்டிருக்கின்றது. கோயிலை வலம் வந்த பெண்கள் நடனம் ஆடுகின்றனர்; அவர்களுடைய நடனத்திற்கு ஏற்றவாறு தாளம், மத்தளம் ஆகியவற்றின் ஒசை முழங்குகின்றது; இவ்:ஒசையைக் கேட்ட சில மந்திகள் அச்சம் கொண்டன; அவ் ஒசையை மழை பெய்யும் மேகத்தின் முழக்கோ என நினைத்தன. அந்நினைவு தோன்றிய உடனே மரத்தின் மேலேறி வானத்தில் ஒடிக் கொண்டிருக்கும் மேகத்தைப் பார்த்தன என்று அந் நிகழ்ச்சியை அழகுற அமைத்துள்ளார் சம்பந்தர்.

புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கி

அறிவழிந்திட்டு ஐம் மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்று

அருள் செய்வான் அமருங்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட

முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி

முகில் பார்க்குங் திருவையாறே.

(பதிகம் 130 - பாடல் 1)

என்னும் இப்பாடல் மாதர்களின் நடனத்தை, மேகக்கூட்டம், அவற்றின் முழக்கம், குரங்குகளின் செயல் என்னும்