பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் 1.59

மூன்றனோடும் இயைபுபடுத்தி இன்பம் விளைப்பதை உணர்கின்றோம் அல்லவா?

குற்றாலத்தின் இயற்கை அமைப்பை, அதன் அழகை இரண்டே வரிகளில் மிக இயல்பாக வருணித்துள்ளார் ஞானசம்பந்தர்.

புத்தம் புதிய மலர்கள் நிறைந்து மணம் வீசும் மலை: மிக நெடிதாக உயர்ந்த மலைச்சாரல்; அங்குவேங்கை மரங்கள் வளர்ந்திருக்கின்றன. அவை தம் கிளைகளை நான்குபுறங்களிலும் பரப்பி அடர்த்தியான கிழலைத் தருகின்றன. மரங்களின் ஊடே அழகிய சோலை; சோலையில் பல்வகை வண்டுகள் யாழ் போன்ற இனிமையாகப் பாடிக்கொண்டிருக்கின்றன. இக்காட்சி யமைந்த தலமே குற்றாலம்’

இதனை,

வம்பார் குன்றம் நீடு உயர் சாரல்வளர் வேங்கைக் கொம்பு ஆர்சோலைக் கோலவண்டு யாழ்செய்யும்

குற்றாலம் (பதிகம் 99 - பாடல் 1)

என இரு அடிகளில் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்து கின்றார் ஞானசம்பந்தர். இவரது பாடல்களில் இடம் பெறும் இயற்கைக் காட்சிகளைத் தொகுத்துப் பார்க்கும் போது அவற்றில் குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என்னும் ஐந்நில வருணனைகள் இடம் பெற்றிருத்தலையும், சம்பந்தரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்றவாறு இயற்கைக் காட்சிகள் புனையப்பட்டிருத்தலையும் அவற்றில் மிகைத்தன்மை இல்லை என்பதையும் உணர முடிகின்றது.

இயற்கையைப் பாடியது போன்றே மக்கள் இன்புற்று வாழும் வகையையும் நெறியையும் சம்பந்தர் படியுள்ளார்.