பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 60 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

இம்மண்ணுலக வாழ்வைச் சில சமயவாதிகள் மாயமென்றும், பொய்யென்றும் உரைத்து மக்களின் மதியிலே மருட்சியை ஆண்டாக்கினார்கள். இதனைக் கண்ட சம்பந்தர் மண்ணுலக வாழ்வு கொடியதன்று: பொய்மையானதன்று அது இன்ப மானதே; யாவரும் எம்விதக் குறையுமில்லாமல் வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உணர்வைத் தம் பாடல்வழிப் புலப்படுத்தினார்.

இல்லறத்திலிருந்து துறவறம்’ என்னும் கருத்தை ஞானசம்பந்தர் வலியுறுத்திப் பாடியுள்ளார். இறைவனை அடைதற்கு உரிய வழிகளுள் ஒன்றாக இதனையும் குறிப்பிட் டிருப்பது தமிழ் இலக்கிய மரபிற்கு ஏற்றதாக விளங்கு கின்றது. தொல்காப்பியனாரும்,

காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.

(தொல். பொருள். கற்பியல் - நூற்பா 190)

என இல்லறத்தின்வழி துறவற மாண்பை விளக்கியிருக்கக் ஆானலாம். தொல்காப்பிய இலக்கணத்தை ஒட்டியெழுந்த , பாக்களிலும் இக்கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டு பலவாகியும் நரை தோன்றாததற்குக் காரணம் யாது?’ என ஒரு புலவரை வினவ, அவர் பல காரணங்களைக் கூறுகின்றார். அவற்றுள் ஒன்று மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்’ என்பதாம்.

யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதிர் ஆயின் மாண்டவென் மனைவியொடு மக்களும் கிரம்பினர் யான்கண் டனையர் என இளையரும் வேந்தனும்