பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

செவ்வி பெறும் மங்கல மடந்தையானாள். திருமணமும் நடந்தேறியது. ஆறிடு மடுவும் மேடும்போல்ஆம் செல்வமன்றோ! கொண்ட கொழுநன் குடி வறுமைவாய்ப் பட்டது. பசியறியா வாழ்க்கையில் பசியே நிறைந்தது. அன்பாற் பிணைந்த வாழ்க்கையில் அவலம் தலைதுாக்கிற்று. உணர்ந்தான் தந்தை, மகள் விரும்பியுண்ணும் கொழுத்த சோற்றினைக் கொடுத்து அனுப்பினான். ஆனால் மகளோ உண்டாளில்லை. தன் காதற்கொழுநன் முயற்சியால் பெறும் புற்கை உணவாயினும் அதுவே இந்திரர் அமிழ்தத்தினும் இனியது எனக் கருதினாள். அன்பால், தந்தை மகள் மாட்டுக் கொண்ட பரிவால் கொடுத்தனுப்பிய சோற்றினை மறுத்து, பசியோடும் வாழக் கற்று, ஒருவேளை விட்டு ஒருவேளை உணவு உண்ணும் நெஞ்சுரம் பெற்றாள். இத்தகைய அறிவும் ஒழுக்கமும் இவளுக்கு எவ்வாறு வாய்த்தன? வழிவழியாக இந்நாட்டில் வள்ர்ந்துவரும் மாண்புநிறை மகளிர் பண்பாடே அவளுக்கு இவ் வறிவினையும் உணர்த்தி நின்றது.

‘பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை எந்திப் புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணிர் முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அரிங்ரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரீஇமெலிங் தொலியப் பந்தர் ஒடி ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகு நீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத்து உண்ணுஞ் சிறுமது கையளே’

இவ் வழிவழிவந்த பண்பாடு காரணமாகத்தான் அறிவிற் சிறந்த ஒளவையாரும் பெண் என்றால் பண்பாடு