பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் I6 I

அல்லவை செய்யாள் காக்கும் அதன் தலை

ஆன்று.அவிந் தடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே. o

(புறம்.191)

என்பது பிசிராந்தையார் என்னும் பெயருடைய அப்புலவர் பெருமான் நரை தோன்றாமைக்குக் காரணம் கூறிப் பாடிய பாடல். இங்கே மாட்சிமை நிலை மனைவி அவருக்கு வாய்த்தமையால் நரை தோன்றவில்லை என்று கூறுவதி லிருந்து வாழ்க்கையில் பெண்மைக்கு உயரிய நிலையினை நம் முன்னோர்கள் அளித்து வந்துள்ளமை தெளிவாகும். வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகையும்,

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை

(திருக்குறள்.53)

என்ற குறளில் இல்லாளாகிய மனைவி மாட்சிமை கொண்ட வளாக அமையின் ஒருவன் எல்லா வளங்களையும், இன்பங் களையும் பெற்றவனாவான் எனக் கூறியிருப்பதும் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

பக்தி இலக்கியங்கள் பெருகிய காலத்திலும் இல்லற நெறி சிறந்ததென்றே கருதப்பட்டது. சம்பந்தரின் சமகாலத் தவரான அப்பர் சுவாமிகளும் இல்லறநெறியை ஏற்புடைய ஒன்றாகவே கருதியுள்ளமை அவர் பாடல்களை நோக்கும்பொழுது புலனாகும். பிறவிப் பெருங்கடலிலிருந்து கரை சேர்க்க வல்ல இறைவனை நமது இலக்கியங்கள் தனியனாகக் காட்டவில்லை. உமையவளுக்குத் தன் உடலின் ஒரு பாதியை அளித்தவனாகவே இலக்கியங்கள் சுட்டுவதைக் காண்கிறோம். இறைவன் அடியவர்களுக்குக் காட்சி அளிக்கையிலும் தன் துணைவியோடு சேர்ந்தே எழுந்தருளும் நிலை பரவலாகக் காணப்படுகின்றது. அப்பர் பெருமானுக்குக் காட்சியளித்த சிவபெருமான் தன் துணைவி உமையவளுடன் சேர்ந்தே எழுந்தருளினார் என்பதை அப்பரின் திருவாக்கினா

மண் -11