பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 62 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

லேயே அறியலாம். உடல் தளர்ந்து, உறுப்புகள் செயலிழந்த நிலையிலும் கயிலைக்காட்சியை எப்படியும் காணவேண்டும் என்னும் வேட்கை கொண்டார் அப்பர். அவரது அன்பின் திறத்திை அறிந்த சிவபெருமான் உமையவளுடன் கயிலைக் காட்சியினை அப்பருக்கு வழங்கினார். அக்காட்சியைக் கண்டுகளித்த அப்பர்,

மாதர்ப் பிறைக்கண்ணி யானைமலையான் மகளொடும் ւ ուգ Լյ பாதொடு நீர் சுமந் தேத்திப் புகுவா ரவர் பின்புகு வேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறுவருவன கண்டேன். கண்டேன் அவர் திருப் பாதங் கண்டறி யாதன

கண்டேன் (திருவையாற்றுப்பதிகம் - பாடல் 1)

எனப் பாடிப் பரவசமெய்தினார். இவ்வாறு ஆணும் பெண்ணுமாய் இணைந்து நடத்தும் இல்லறமாண்பை இறை நிலைக்குரியதாகக் காட்டும் மரபினை அப்பர் பெருமான் அடியொற்றிப் பாடல்கள் புனைந்தமை அறிகின்றோம்.

இத்தகு மரபில் வந்த திருஞானசம்பந்தர் இல்லறத்தின் பெருமையினை,

மண்ணினல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணினல் லகதிக்குயாதுமோர் குறைவிலைக் கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே

(பதிகம் 282 - பாடல் 1) என்னும் பாடலின்வழி எடுத்துரைக்கின்றார். பேரின்பமாகிய இறைவனுடன் இரண்டற இயைந்து நிற்பதற்கு இல்லறம் பெருந்துணை புரிவதாகக் காட்டியுள்ளமை அறிந்து இன்புறுதற்குரியது. சம்பந்தர் பெருமான் இப்பாடலில் மட்டுமன்றி வேறு சில பாடல்களிலும் சிவபெருமானையும்