பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் I 63

உமையவளையும் ஒருங்குவைத்துப் பாடியுள்ளமை அறியலா கின்றது. திருவண்ணாமலைப் பதிகத்தில் இறைவன் உமைய வளுடன் தோன்றும் காட்சியை அழகுத் தமிழில் நம் கண் முன்னே படம் போன்று காட்டுகின்றார்.

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய

வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம் முழவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவா

வண்ணமறுமே (பதிகம் 10-பாடல் 1

J என இறைவனும் இறைவியும் இணைந்து தோன்றும் காட்சி இப்பாடலில் வெளிப்படுகின்றது. சக்தி, சிவம் என்னும் தத்துவமும் இப்பாடலில் அமைகின்றது. இவ்வாறு வாழ்வின் அடிப்படையாய் அமையும் இல்லற நெறியினைத் தம் பாடல் களின் வழியே பண்டை மரபினை ஒட்டியவாறு சம்பந்தர் அமைத்துள்ள பாங்கு போற்றுதற்குரியது.

இல்லறத்தைப் பாடியது போன்றே வாழ்வின் பிற கூறுகளையும் சம்பந்தர் பாடியுள்ளார். வாழ்வு துன்பங்கள் நிறைந்தது; அதிலிருந்து மீள வேண்டுமெனில் ஏதேனும் ஒரு நெறியைப் பின்பற்ற வேண்டும்; அவ்வாறு பின்பற்றினால் வாழ்வு சிறக்கும் என்றும் கூறுகின்றார். இதனை,

அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்திராது நீர் நல்லதோர் நெறியினை நாடுமின் நாடுமினோ வில்லை அன்ன வாள் நுதல் வெள்வளை ஓர் பாகமாம்

கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடி காவு

சேர்மினே.

(பதிகம் 235, பாடல் 2)

எனவரும் பாடலின்மூலம் சுட்டுகின்றார். இதில், முதலிரண்டு அடிகளில் துன்பமிக்க வாழ்வை ஆதரிக்காது, இன்பமிக்க