பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

வாழ்வை விரும்பி அதனை அடைய நல்ல நெறியைத் தேடுங் கள் அதனைத் தேடுவதுடன் நின்றுவிடாது அந்நெறிப்படியே நடவுங்கள் என்று அறிவுறுத்துவதைக் காண்கிறோம். இதுபோன்றே மற்றோர் பாடலில்,

துன்பமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர் தக்கதுஓர் நெற்றியினைச் சார்தல் செய்யப் போதுமின்

(பதிகம்-235-பாடல் 3)

என்று சீரிய நெறி ஒன்றைப் பின்பற்றுமாறு உரைக்கின்றார். வாழ்க்கை என்பது மேடும் பள்ளமும் நிறைந்தது: கல்லும் முள்ளும் கலந்த பாதைவழிச் செல்லும் பயணம் போன்றது. அதற்காக அஞ்சி வாழ்வை நடத்தாமல் வாளாவிருத்தல் பண்பன்று. வாழ்வை எதிர்நோக்கும் துணிவைப் பெற்று நடக்க வேண்டும். அதற்கேற்ற நல்ல வழியை அறிந்து கொண்டு அதன்வழி ஒழுகவேண்டும், என உலகியல் நிலையை ஒட்டியவாறு தமது கருத்தை வழங்கியுள்ளார் ஞானசம்பந்தர். வாழ்வே மாயம் என்னும் கொள்கையை அவர் போற்றவில்லை. வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் அரிய உண்மையை கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே ஒரு சமயவாதி எடுத்துக் கூறியிருப்பது நமது சிந்தையை மகிழ்விக் கும் செய்தியாக அமைகின்றது.

ஒரு நெறியைப் பின்பற்றுமாறு கூறிய சம்பந்தர் ஆண்டவனின் அருங்குணங்களையும் அவனை அடையும் முறைகளையும் கூறி மக்களைத் தமது பாதைக்கு அழைத்து வரும் முயற்சியில் இறங்கினார். அதற்கு அவர் பின்பற்றிய வழி அன்புவழி. அன்பினால் ஆகாதது உண்டோ? என்ற வினாவை நெஞ்சில் நிறுத்தி அன்புரிமை பூண்டு வாழும் நெறியைக் கைக்கொண்டார். பிறரையும் அன்புவழியில் ஒழுகுமாறு செய்தார். அன்புவழியே உயரியவழி என்ற உண்மையை நிறுவுவதற்கே இறைவன் அன்பு வடிவானவன் அன்புடையார் மாட்டே அவன் இருப்பான்’ என்ற கருத்தமைந்த பாடல்களைப் பாடினார்.