பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் 五65

அருந்தானை அன்புசெய்து ஏத்த இயலார் பால் பொருந்தானைப் பொய் அடிமைத் தொழில் செய்வாருள் விருந்தானை வேதியர் ஒதிமிடை காழி இருந்தானை ஏத்துமின்! நம் வினை கெடவே

(பதிகம்-147-பாடல் 3)

எனவரும் பாடலில், பழவினைப் பற்றிலிருந்து விடுபட சீகாழிப் பெருமானை வணங்குக; அவன் அன்புடையார் மாட்டே இருப்பான்; உங்களிடம் அன்புணர்வு பெருகு மானால் அவன் உங்களின் வினைத்தொடர்பை அறுத்தெறி வான்’ என்னும் பொருள்பட அன்பின் பெருமையை வலியுறுத்தி உள்ளார் சம்பந்தர்.

அன்புரிமை உடையவராய் இருப்பதுடன் கூடவே வஞ்சனை புரியும் மனம், பொய்மைக் கருத்து ஆகியவற்றை ஒழித்துவிட்டு உள்ளம் ஒன்றிய உயரிய வழியிலே நிற்பவ ராயும் இருக்க வேண்டும் என்னும் கருத்தையும் ஞான சம்பந்தர் போற்றி உரைக்கின்றார்.

கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட்டு அருத்தியோடு உள்ளம் ஒன்றி உள் குவார் உளத்து உளான் H go–G, TE RE goen IT துள்ளி வாளை பாய்வயல் கரும்பு உலாவு நெய்தல்வாய் அள்ளல் நாரை ஆரல்வாரும் அம் தன் ஆரூர் என்பதே. (பதிகம் 237-பாடல் 6)

என நெஞ்சிலே கள்ளம், வஞ்சகம் இவற்றை ஒழித்துவிட்டு, அன்புடன், உள்ளத்தை வேறுவழியில் செலுத்தாமல் ஒரே நிலையில் நின்று இறைவனை நினைக்கவேண்டும் : இப்படி நினைப்பவர்கள் நெஞ்சிலேதான் இறைவன் இருப்பான் என்று கூறுவதன் வாயிலாக அவர் வஞ்சம், பொய்மை இவற்றைக் கண்டித்து மக்களை நல்லாற்றுப்படுத்தியுள்ள பாங்கு வெளிப்படுகின்றது.