பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 66 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

அன்பு நெறி நின்று, கள்ளம், வஞ்சம் ஒழித்து, உள்ளம் ஒன்றி இறைவனை வழிபடுமாறு வேண்டிய சம்பந்தர் அவ்விறைவனின் பெருமைகளைப் புகழ்ந்துரைக்கின்றார்.

மன்னானவ னுலகிற்கொரு மழையானவன் மழையில் பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்

புளமங்கைக் என்னானவ னிசையானவ னிள ஞாயிறின் சோதி அன்ாைனவ னுறையும்மிட மாலந் துறையதுவே

(பதிகம் 16-பாடல் 6)

என வருகின்ற இப்பாடலில் இறைவன் எவ்வெத் தன்மை களைக் கொண்டில்ங்குகின்றான் என்பதை விளக்குகின்றார். இறைவன் நாடாளும் மன்னனாக, எவ்வுயிர்க்கும் இன்றியமை யாத மழையாக செல்வக்களஞ்சியமாம் பொன்னாக, எதிலும் முதன்மையானவனாக, இன்புறுத்தும் இசையாக, இளஞாயிற்றின் சோதியாக இருக்கின்ற பான்மையைச் சம்பந்தர் எடுத்தோதி உய்யும் வழி கூறுகின்றார்.

சம்பந்தர் தமக்கென்று இறைவனிடம் எதுவும் கேட்ட தில்லை. பிறர் நலன் பேணியே இறைவனிடம் வேண்டுகோள் களை விடுத்தார். அத்தகு பரந்த மனப்பான்மை கொண்ட அவர் உலகம் முழுதும் துயர்நீங்கி இன்புறுக’ என வாழ்த்தும் வகையில் இறைவனைப் பரவுகின்றார்.

வாழ்க அந்தணர்; வானவர் ஆணினம் வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம்; அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

(பதிகம் 312-பாடல் 1)

என்னும் பாடலில் சம்பந்தரின் உலகு தழுவிய பார்வை’ பளிச்சென வெளிப்படுகின்றது. தன்னலமற்ற சமயவாதியாக உலக நலம் பேணும் உயர்ந்த உள்ளத்தராகச் சம்பந்தர்