பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் I 67

திகழ்வதை இப்பாடல்வழி அறிய முடிகின்றது. சம்பந்தரின் முழு ஆளுமையையும் வெளிப்படுத்தும் பாடலாக இதனைக் கருதுவதில் தவறில்லை.

சம்பந்தர், பதினாறு ஆண்டுகளே இம்மண்ணில் வாழ்ந்து 385 திருப்பதிகங்களிலே ஏறத்தாழ 4000த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, சைவநெறி ஒங்கும் வகையில் உள்ளம் ஒன்றி உழைத்தார். அவர் பாடிய பாடல்களிலிருந்து அவரது அருட்செயல்கள் பல வெளிப்படுகின்றன; அவருடைய பாடல் களில் அகப்பொருள் நெறி பாங்குற அமைந்து இலக்கிய இன்பம் அளிக்கின்றது; இயற்கை வளம் எழில்மிகச் சித்திரிக் கப்பட்டிருப்பதை அவர்தம் பாடல்கள் புலப்படுத்துகின்றன: தூயநெறி, ஒன்றைப் பின்பற்றி அன்பு கொண்டு, வஞ்சம், கள்ளம் அழித்து, மனம் ஒன்றி இறைவனை வழிபட்டால் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்னும் வாழ்வியல் முறையை விளக்குவனவாக அவருடைய பாடல்கள் அமைந் துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தன்னலம் சிறிதும் பேணாதவர். பிறர்நலம் பெரிதும் பேணியவர். நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பி சைவ நெறியைத் தழைக்கச் செய்தவர். அவரது தொண்டால் சைவம் மறுமலர்ச்சி பெற்றது. சிவநெறி செழித்தது; தமிழ் மொழி வளம் பெற்றது; இன்னிசையொலி எங்கும் பரந்தது: கண்ணுதற் கடவுளின் தண்ணருள் அனைவர் மாட்டும் சுரந்தது; இவ் உலகம் உய்ந்தது. சுருங்கக் கூறின் திருஞான சம்பந்தர் சைவத்தின் மறுபிறப்பாய்த் தோன்றியவர் ான லாம்.