பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் 9.

என்பதுபட, ஒரு நாடு நாடாக இருந்தாலும் காடாக இருந் தாலும், ஒரு நிலம் பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந் தாலும் கவலை இல்லை; அந்நிலத்தில் வாழும் ஆடவர்கள் நல்லவர்களாக அமைந்து விடுவார்களேயானால் அந்நிலமும் வாழ்ந்துவிடும் என்று குறிப்பிட்டார் ;

“நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.”

நெருப்பு ஆற்றல் மிக்கதுதான்; ஆனால் அந்த நெருப்பைத் தண்மை மிகுந்த தண்ணிர் அணைத்து அவித்து விடுகிறது. அதுபோல நீரோ ரன்ன சாயலாள் தீயோரன்ன ஆடவனின் உரத்தினை அவித்து விடுகின்றாள். ஆயினும் தன்னை மணக்கும் ஆடவன் வீரத்தின் விளைநிலமாக வீறுடன் விளங்க வேண்டும் என்றே விரும்பினாள் நங்கை. கொம்பாற் குத்திக் கொல்லவரும் காளைக்கு அஞ்சும் கட்டிளங்காளையினை முல்லைநிலப் பெண் கருத்திற் கொள்வதே இல்லை.

“கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்’

என்றபடி மறுபிறவியிலும் காள்ையை அடக்க இயலாத காளைக்குக் கடிமணம் கூடுதல் இல்லை என்பதோடு ‘நலஞ்சார் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும் பெறலருங் குரையர்’ (அகம் : 280; 4.6) என்றும் ,

‘முழங்குகடன் முழவின் முசிறி யன்ன

நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும் புரையர் அல்லோர் வரையலள் இவளெனத் தந்தையுங் கொடா'அன்'