பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

என்றும் அகமும் புறமும் காட்டும் அருந்தொடர்கள் பெண்ணின் உரிமையைப் பெரிதும் பேசும். தலைமகன் ஒருவன் தலைமகளைச் சுட்டி, அவளுக்குக் கணவன் யான் எனக் கூறிக் கொள்வதில் ஒருசிறிதும் நாணவில்லை; மாறாகப் பெருமிதம் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள செய்தியினை உளங்கொளல் தகும்.

‘நல்லோள் கணவன் இவன் எனப்

பல்லோர் கூறயாம் நானுகம் சிறிதே.”*

இதுகுறித்தன்றோ நக்கீரர் பெருமானும், திருப்பரங் குன்றத்தில் தெய்வயானைப் பிராட்டியாரைத் திருமணம் முடித்துத் திகழ்தரும் திருமுருகனைக் குறிப்பிடவந்தவிடத்து, “மறுவில் கற்பின் வாள் நுதல் கணவன்’ எனத் தெய்வ யானைக்குச் சிறப்புத்தந்து, தெய்வயானையின் கணவனே என முருகனை விளித்தார். சேரநாட்டுப் பெருவேந்தர்களைப் பலபடப் பாராட்டிப்பேசும் பைந்தமிழ்ப் புலவர்களெல்லாம் அவ்வேந்தர்களை,

“பெண்மை சான்று பெருமட நிலை இக்

கற்பிறை கொண்ட கமஞ் சுடர்நுதல்

புரையோள் கணவ"ே என்றும் ‘சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ’ என்றும் அவர் தம் மனைவியோடு சார்த்தியே பாராட்டியுள்ளனர். பின்னாளில் நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய முத்தமிழ் விரகாம் திருஞானசம்பந்தப் பெருமானும் திருமறைக் காட்டுறை சிவபெருமானைப் பாடப்புகுங்கால், அச் சிவனார் வள்ளியின் தேனுாறு கிளவிக்கு வாயூறி நின்ற செந்தில்மேய வள்ளிமணாளனாம் முருகனுக்குத் தந்தை என்றே குறிப்பிட் டிருக்கக் காணலாம்:

“நம் செந்தில்மேய

வள்ளி மணாளர்க்குத்தாதை கண்டாய்’

-திருமறைக்காட்டுப் பதிகம்.