பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் 13

“The world is too much with us late and soon

Getting and spending we lay waste our powers Little we see in Nature that is ours. We have given our hearts away a sordid boon.”

ஈட்டலும் இழத்தலுமாயமைந்திருக்கும் வாழ்க்கையில் இயற்கையொன்றே என்றும் அமைதி நல்குவது என ஏரிவட்ட இயற்கைநெறி பரவு ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் கிளத்திப் போந்தார். இம்முறையில்தான் நற்றிணைத் தலைமகள் ஒருத்தி, தான் ஒரு ஞான்று புன்னைமரத்தடியில் நின்றுகொண்டிருக்கவும், தன்னோடு காதற்பேச்சினைக் கட்டவிழ்த்துவிட வந்த தலைமகனிடமிருந்தும் பிரிந்து போய்ப் பிறிதோரிடம் நிற்கவும், அதற்குரிய காரணம் வினவிய தலைமகனுக்குத் தன் தமக்கை முன் காதற் பேச்சினைக் கேட்க நாணம் மேலிடுமன்றோ என்று கூறிப் புன்னைமரத்தின் சிறப்பினைப் புகன்றதாகவும் ஒரு செய்தி உளது. சிறுவயதில் தலைமகனின் தாய் மணலில் புன்னைக் கொட்டையை அழுத்தித் தோழியருடன் விளையாடா நிற்க, அவளைப் பெற்ற தாய் உணவுண்ண அழைக்க, அதுகாறும் விளையாட்டிற்குப் பயன்பட்ட புன்னைக் கொட்டையை மறதியாக மணலிலேயே மறந்து வைத்துவிட்டுப் போய்விட, பின்னர்ப் பெய்த பெருமழையாற் புன்னை தழைக்க, அதுகண்ட மகள் எருவிட்டு, நீர் பாய்ச்சி, காவல் அமைத்துப் புன்னையை வளர்க்க, அது வளரவும், தான் பருவம் வந்து திருமணம் கண்டு மகள் பிறக்கவும், அம்மகளை ஒருநாள் அழைத்து, வளர்ந்திருந்த புன்னைமரத்தைக் காட்டி, அப் புன்னைமரம் தலைமகளைப் பெற்றெடுத்துப் பேணி வளர்ப்பதற்கு முன் வளர்க்கப்பட்ட காரணத்தால் அப் புன்னை இன்றைய தலைமகளுக்குத் தமக்கை முறை ஆக வேண்டும் எனக் குறிப்பிட்ட செய்தியினை நினைவூட்டினாள்.

“நும்மிற் சிறந்தது நுவவை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே,'4ே