பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

‘முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்’ விளங்குவது தமிழ், வறிது நிலைஇய காயம்’. வளவன் ஏவா வானவூர்தி முதலிய தொடர்கள் தம் முந்தையோருடைய அறிவியல் அறிவைக் காட்டும். சேமச் செப்பு இன்றைய தெர்மாஸ்பிளாஸ்க் போன்றது. இவையெல்லாம் அறிவியல் திறம் உணர்த்தும்.

“அற்சிரக் காலத்து வெப்பத் தண்ணிர்

சேமச் செப்பிற் பெறி இயரோ'க: எனத் தோழி அறிவரைப் பார்த்து, வினவும் கூற்றில் அமைந் துள்ள நுட்பம் நுனுகி உணரத்தக்கது.

சின்னஞ்சிறுவயதில் விளையாட்டை வினையாக்கிக் கொண்டு சிறுபூசல் விளைவித்த தலைமகனும் தலைமகளும் வாழ்வில் இணைகின்றனர். இவர்களை இணைத்து வைத்தது பாலே-ஊழே-என்பர் ஒரு புலவர்.

“இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன்

புன்றலை ஒரி வாங்குகள் பரியவும் காதற்செவிலியர் தவிர்ப்பவும் தவிரார் ஏதிற் சிறுசெரு வுறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்ன இவர் மணமகிழ் இயற்கை காட்டியோயே,'’

முன்னால் ஒருவர்க்கொருவர் தாயினையும் தந்தையினை யும், ஏன்? தங்களையே கூட அறிந்திராதவர்கள், இன்று செம்மண் பூமியிற் பெய்த மழைநீர் அந்நிலத்தோடு ஒன்று கலப்பதுபோல மனத்தால் இணைகின்றனர்.

‘யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும்