பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

பொருளைத் திருப்பித் தராமலும் வளமாக எஞ்ஞான்றும் வாழலாம் என்ற எதிர்காலச் சிந்தனையில் அமிழ்ந்து விடாமலும் எல்லோர்க்கும் வாரி வழங்குவாயாக’ என ஆணையிட்டதனை எண்ணிப் பார்ப்பின் தமிழர்தம் தலையாய அறப்பண்பு விளங்கிடக் காணலாம்.

“கின்னயந் துறைார்க்கும் நேயர் துறைார்க்கும் பன்மாண் கற்பின்கின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழகின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னார்க் கென்னா தென்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்றென்னாது எல்லார்க்கும் கொடுமதி மனைகிழவோயே பழந்துாங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமணன் நல்கிய வளனே. 48

இனிச் சங்க இலக்கியங் காட்டும் மணியான தொடர்கள் வழி வாழ்வியல் உண்மைகளைக் கண்டு தெளியலாம்.

“வினையே ஆடவர்க் குயிரே வாள் நுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்.’

“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.”*

“அல்லி யாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல்.’’49

“கற்பினின் வழாஅல் நற்பல வதவி

பெற்றோன் பெட்கும் பிணையை ஆகென.”

“ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ சென்ற இளமை தரற்கு.'