பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் I 7

■ - “யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல கின் பால் அருளும் அன்பும் அறமும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதா ராயோ..”* “நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க.’ “உண்டா லம்மவிவ் வுலகம்......

தமக்கென முயலா நோன் தாள், பிறர்க்கென முயலுகர்

உண்மையானே. !ே

சங்க இலக்கியத்தின் முடிமணியாக உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கத்தக்க பாடலாக அமைந் துள்ள பாடல் கணியன் பூங்குன்றன் பாடியுள்ள புறநானுாற்றுப் பாடலாகும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே முனிவில் இன்னா தென்றலும் இலமே மின்னொடு நீர்வழிப் படு உம் புனைபோல் ஆருயிர் முறைவழிப் படு உம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”

இத்தகு சீர்த்தி வாய்ந்த சங்க இலக்கியம் காருள்ள அளவும், கடல் நீருள்ள அளவும், வானுள்ள அளவும், வானில் வான்கருணை உள்ள அளவும் நின்று நிலவுதல் உறுதி, சங்க காலம் தமிழகத்தின் பொற்காலம் எனக்கூறி அமைவல்.

மண், -2