பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு

மனித சமுதாயத்தின் செம்மையான வாழ்வு நிலையைக் கண்டறிய உதவுவனவற்றுள், அச்சமுதாயம் பின்பற்றுகின்ற நாகரிகக் கூறுகளும் போற்றிப் புரக்கின்ற பண்பாட்டுக் கூறுகளும் தலைமை சான்றவை. இவற்றுள் நாகரிகம் மனிதர்களின் புறவளர்ச்சியைத் தெளிவுபடுத்தவல்லது. அதாவது நடை, உடை, பாவனைகளால், காலந்தோறும் பெருகி வருகின்ற புதுமைகளைக் கடைப்பிடிப்பதால் மனிதர் களிடையே-அவர்தம் புற ஒழுகலாறுகளிடையே-காணத் தக்க மாற்றங்களை விளக்க வல்லது. ஆயின் பண்பாடு அத்தகையதன்று. அது மனித சமுதாயத்தின் அக வளர்ச்சியை -மனவளர்ச்சியை முழுமையாக உணர உதவுவதாகும். தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கைகள், பொதுமைச் சிறப்பு, மனிதநேயம், கடமை உணர்வு, அழியாத மன உணர்வு முதலானவற்றைத் தெள்ளத் தெளிவாகக் காட்ட வல்ல செயல்களின் அடிப்படையில் பண்பாட்டு நிலை உணரப் பெறுகின்றது. தொழிற்பெருக்கத்தாலும், புதிய கண்டுபிடிப்புகளாலும் மாறுதலடைகின்ற நாகரிகக் கூறுகள் போல் இல்லாமல் பழமைச் சிறப்புகளைப் போற்றி ஒரு சமுதாயத்தின் உள்ளார்ந்த வாழ்வு நிலையைச் சித்திரிக்க வல்லவையாகத் திகழ்பவை பண்பாட்டுக் கூறுகள். இத்தகு பண்பாட்டுக் கூறுகள் மனிதர்கள் போற்றும் கலைகளின்வழி வெளிப்படுகின்றன. அவற்றுள் இலக்கியம் என்னும் கலையின் வழிப்படும் பண்பாட்டு நிலை அறியத்தக்க