பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

அகம்

காதல் வாழ்வு

சங்க இலக்கியத்தின் பெரும்பகுதி ஆண் பெண் இருவரும் இணைந்து வாழும் வாழ்வு நிலையைச் சித்திரிப்பதாக அமைந்துள்ளது. இதனை அக ஒழுக்கம் அல்லது அகத்தினை என்னும் பெயரால் குறிப்பர். வயது, கல்வி, செல்வம் , குலம் முதலானவற்றால் ஒத்த ஒர் ஆணும் ஒரு பெண்ணும் தம்முள் எதிர்ப்பட்டு ஒருவரையொருவர் கவர்ந்து மன மகிழ்வுற்றுக் காதல்கொள்ளும் தன்மை பழந்தமிழகத்தில் பெருவழக்கினதாய் இருந்தது. இதனை, குறுந்தொகைப் பாடலொன்றால் அறியலாம். தாய், தந்தை, தமையன் முதலான சுற்றத்தாரை விட்டுப் பிரிந்து தலைமகன்மாட்டுக் கொண்ட காதல் ஈர்த்தலாலே அவனுடன் புறப்பட்டுச் சென்றாள் தலைமகள் ஒருத்தி. அவளைத் தேடிச் சென்று காணாத செவிலித் தாய், தன் மகனைத் தவிரப் பிற ஆண்களும் பாலைவழியில் மிகுதியாகச் சென்றனர்; அவர் களின் எண்ணிக்கை வானிலுள்ள நட்சத்திரங்களைவிடக் கூடுதலானது எனக் கூறிப் பெருமூச்சு விடுகின்றாள். அவளது கூற்றாக வரும் ,

அகலிரு விசும்பின் மீனினும்

பலரே மன்ற இவ் வுலகத்துப் பிறரே?

என்னும் இப் பாடலடிகள் வாயிலாகப் பண்டைநாளில் காதல் மணம் புரிதல் என்னும் பண்புநிலை மிக்கிருந்ததை உணர முடிகின்றது.

காதல் வாழ்வில் தலைமகன்

இத்தகைய காதல் வாழ்வில் தத்தம் பண்புத்திறம்

பளிச்சிடும் வண்ணம் சங்க இலக்கியத் தலைமகனும்

தலைமகளும் வரம்பு இகவாது வாழ்ந்தமை அறிகின்றோம்.