பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 23

தலைமகன் ஒருவன் தன் காதலியை விட்டுப் பிரிய மனமில்லாது அவளை அவாவி நிற்றலை மட்டும் விரும்பும் போக்கு பட்டினப்பாலையில் திறம்பட மொ ழி ய ப்

பெற்றுள்ளது.

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே

என வரும் பாடலடிகள் காதலின் வலிமையைக் காட்டுவன. பழிதீர் தேயமாக மிக்க சிறப்புடன் விளங்கிய காவிரிப்பூம் பட்டின நகரையே பெறுவதாக இருந்தாலும் தன் காதலி இல்லாமல் தன்னால் தனியனாய் வரவியலாது என்று கூறும் தலைமகளின் காதலுணர்வு பண்பட்ட உறவாய்-உணர்வாய் ஒளிர்கின்றது. வாழ்வில் காதலின் வலிமை பெறுகின்ற இடத்தையும் அதனை முறையாகப் பேணும் தலைமகளின் இப்பகுதி தெளிவுபடுத்துகின்றது. இது போன்றே,

குடநாடு பெறினும் தவிரலர் மடமான் நோக்கிகின் மாணலம் மறந்தேக்

என்னும் தோழியின் கூற்றாகவும் த ைல ம க னி ன் காதலொழுக்கம் கிளத்தப்பட்டுள்ளது. செல்வம் வரும்; போகும். ஆகையால் அது குறித்துக் கவலுவதில்லை. ஆயின் மனத்திற்கிசைந்த பெண்ணின் நல்லாளின் பெருநட்பு வாழ்வின் இறுதிவரை வரக்கூடியது; அது நீடித்து நிலைக்க வேண்டும்; இன்பம் நல்க வேண்டும் என்றே யாவரும் விரும்புவர். எனவேதான் அந்நட்பை உதறித்தள்ளும் பண்பற்ற நிலையைப் பழந்தமிழ் மக்கள் பேணாது ஒதுக்கினர். இஃது அவர்தம் காதல் ஈடுபாட்டிற்குச் சான்றாகும்.