பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மண்ணில் நல்லவண்ண்ம் வாழலாம்

காதல் வாழ்வில் தலைமகள்

இல்லத்திலிருந்துகொண்டு நல்லனவற்றை ஆற்ற வேண்டிய கடமை தலைமகளுக்குரியது; வினை மேற் சென்று திரும்பும் ஆடவரே பெண்டிர்க்கு உயிர் போன்றவர் என்னும் சீரிய பண்பு வாய்க்கப்பெற்ற சமுதாயமாகப் பழந்தமிழ்ச் சமுதாயம் நிலவியது. தன்பால் அன்பு செலுத்திக் காதல் கொண்டவனைப் பெரிதும் நம்பும் தலைமகளைச் சங்க நூல்கள் பாங்குடன் பகர்கின்றன. தலைமகளுடன் தான் கொண்ட உறவினை, நட்பினை,

கிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”

எனப் பெருமிதப் பண்பு தோன்றக் கூறும் தலைமகளின் நலமிகுமொழியைக் குறுந்தொகை வாயிலாக அறிகின்றோம். இத்தகு காதல் வாழ்வில் ஒரு சிறிது நேரப் பிரிவு ஏற்பட்டாலும் வருத்தம் மேலிட்டு, அத்துன்பத்தைப் பொறுக்க ஆற்றாது வாழ்வை மறக்கும் தலைமகளை,

ஒரு நாள் விழுமம் உறினும் வழிநாள் வாழ்குவள் அல்லளென் தோழி’

என அகநானுாறு காட்டுகின்றது. அவள் தலைமகனிடத்துக்

கொண்ட காதல், பிணைப்பிற்கு இப்பாடல் ஏற்ற சான்றாகும். இது போன்றே,

யாமே பிரிவின் றியைந்த துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஒருயி ரம்மே”

என்னும் பாடலடிகளும் ஒருமித்த காதலுணர்வின் வெளிப்பாடாய் இலங்குகின்றமை உணரத்தகும். காதல் கொண்ட பிறகு தான்வேறு அவன் வேறு; தான் வேறு அவள்