பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 25

வேறு என நினைக்கும் இருவகை நினைப்பொழிந்து ஒருமை யுணர்வில் திளைக்கும் பண்பட்ட தலைமக்களைக் கொண்ட சமுதாயமாக நம் பழந்தமிழகம் நிலவிற்று. மனித ஆன்மா இறைவனுடன் ஐக்கியமாகும்போது தோன்றுகின்ற எல்லாம் இறை என்னும் இறைக் கொள்கை போன்று ஈருடல் ஒருயிர்த் தன்மைத்தாய்’ சங்ககாலத் தலைமக்களின் காதல் கொள்கை அமைந்திருந்தது. இதில் தலைமகள் கொண்ட காதற்பிணைப்பே மிக ஆழமாக வெளிப்படுகின்றது. இத்தகு காதற் பிணைப்பென்னும் பண்பைச் சங்க இலக்கியம் மிகுதி யும் போற்றியுரைக்கின்றது.

தலைவன், தலைவியை மறந்தாலும் அவள் அவனை மறவாது போற்றுகின்ற நிலையைச் சில பாடல்கள் சுட்டு கின்றன. குறித்த காலம் கடந்தும் வாராத தலைவனை எண்ணி வருந்திய தலைவி தன் வருத்தத்தைத் தணித்துக் கொண்டு தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொள்ளுதல் போல,

மறந்தோர் மன்ற மறவா நாமே?

எனப் பேசுகின்றாள். தலைமகன்பால் அவள் கொண்டி ருக்கும் பிணைப்பிற்கு இதுவும் சிறந்த சான்றாகும்.

நஞ்சையள்ளும் சிலம்பிலே,

தம்முடைய தண்ணளியும் தாமுந்தம் மான்றேரும் எம்மை கினையாது விட்டாரோ விட்டகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்ே

என மாதவி பாடும் கானல்வரிப் பாடலுடன் மேற்சுட்டிய

பாடல டியை இயைபுபடுத்திக் காணுதல் தமிழ்ச் ச. மு. த | ய த் தி ன் பண்புநலத்தை மேலும் அறியத்

துணைபுரியும்.