பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

அடுத்து, தலைமகன் வாழ்வு போன்றதே தன் வாழ்வும்: தனக்கென்று தனியொரு வாழ்வில்லை எனக் கருதும் சீரிய பண்புத் திறம் தலைமகளிடம் குடிகொண்டிருத்தலைச் சங்கப் பாக்களில் காண முடிகின்றது. வினை.வயிற் சென்று பொருளீட்டி வந்து இல்லறம் போற்றல் அக்காலத்தில் ஆடவரின் இயல்பாக-கடமையாகக் கருதப்பட்டது. கடமையைக் கருத்திற்கொண்டு பொருளிட்டச் செல்லும் தலைமகன் தன் செலவைக் குறிப்பால் தலைமகளுக்கு உணர்த்த அவள் அவனைப் பிரிந்து வாழப் பொறாதவளாய், தன்னையும் அழைத்துச் செல்லுமாறு வேண்டினாள். தலைமகனோ செல்லும் வழியின் சிதைவுகளையும், அவ் வழியில் செல்வதால் நேரும் இன்னல்களையும் எடுத்துரைத்து அவளது வரவைத் தவிர்க்க முயன்றான். ஆயின், அவள் வழியது அருமையைக் கருதாது அவனுடன் செல்லுவதையே பெரும் பேறாகக் கருதி,

பு .நும்மொடு துன்பம் துணையாக நாடின் அதுவல்லது --- இன்பமும் உண்டோ எமக்கு10

என மறுமொழி பகர்ந்தாள். உனது துன்பத்தின்கண் நான் துணையாக இருப்பதொன்றே எனக்கு இன்பமாக இருக்கும்; அதைத் தவிரப் பிற இன்பம் எதுவும் இல்லை எனக் கூறும் தலைமகளின் பண்புத்திறம் சங்க இலக்கியப் பதக்கத்துள் பதிக்கப்பெற்ற நவமணியென ஒளிர்கின்றது.

பிறிதொரு தலைமகள் தன்னிடம் உள்ள வளத்தை விடவும் தலைமகனிடம் உள்ள வறுமையை உயர்வாகக் கருதுகின்றாள்; அவ்வறுமையைப் பெருமையாகக் கருதுவதில் அவள் அவனுடன் கொண்டுள்ள பிணைப்பின் உறுதி, இறுக்கம் , செறிவு ஆகியவற்றை உணர முடிகின்றது. இதனை,