பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

நின்ற சொல்லர் டுேதோ றிளிையர்

எனத் தலைமகனைப் புகழ்ந்துரைக்கும் பகுதி தலைமகளின் நம்பிக்கையுணர்வுக்குச் சான்றாக வல்லது. தலைமகன் குறித்துச் சென்ற காலத்தில் வாராதிருப்பினும் அவன் மீது கொண்ட நம்பிக்கையைச் சிதையாது அவன் நினைவை விட்டொழியாது வாழும் பண்பினைத் தலைமகள் கொண் டிருந்தாள். பொதுவாக , க ா ர் க | ல ம் தலைமகன் வினைமுடித்து வீடு திரும்பும் காலமாகும். கார்காலம் தொடங்கியவுடன் காயா, கொன்றை முதலான மரங்களில் செழிப்பும் வனப்பும் கொண்ட அழகிய மலர்கள் பூக்கும்; முல்லையரும்பு முகிழ்த்து மலரத் தொடங்கும். இந்தப் புறநிகழ்வுகளைக் கொண்டு கார்ப்பருவத்தை அறிந்து தலைவன் வரும் கால மிது என எண்ணுதல் அக்கால மக்களின் இயல்பு.

கார்காலம் வந்தும் தலைமகன் வரவில்லை என்றால் கலக்கம் கொள்வர். அவ்வாறே ஒரு தலைமகன் வாராததால் தலைமகளிடம் அவளது தோழியும் பிறரும் தலைமகனின் வருகை பிறழ்ந்தமை கூறி வருந்தினர். வருந்த வேண்டிய தலைவியோ, அதற்கு வருந்தாது என் காதலர் குறித்த காலத்தில் வந்துவிடுவார்; இது கார்காலம் இல்லை, ஏனெனில் அவர் பொய்கூறமாட்டார் என மறுமொழியுரைத் தாள். இதனை,

கானங் காரெனக் கூறினும் யானோ தேறே னவர் பொய்வழங் கலரே”

என்னும் குறுந்தொகைப் பாடலடிகளால் அறியலாம். சங்க இலக்கியத் தலைமகள் தன் காதலன் மீது கொண்டிருந்த நம்பிக்கையை, தான் வரும்வரை ஆற்றியிரு என அவன் விடுத்த வேண்டுகோளைச் செவிமடுத்துத் தன் நிலையி லிருந்து மாறாமல் கற்புத்திறம் மேம்பட வாழ்ந்தமை உணர முடிகின்றது.