பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

என்னும் அடிகள் தலைமகளின் கற்பெனும் பண்புநலத்தைக் காட்டுகின்றது. இவற்றின் வாயிலாக அக்கால மகளிர் தலைவன்பால் நம்பிக்கையையும் அவன் வரும் வரை ஆற்றி யிருக்கின்ற தன்மையையும் அவன் சொற்படி நடக்கும் கேண்மையையும் நற்பண்புகளாகப் பெற்றிருத்தமை புலனா கின்றது.

தலைமகள்ைப் போன்றே அவளது தோழியும் நற்பண்பு களின் பெட்டகமாய் அமைதலைச் சங்கப்பாடல்கள் வழி அறிய முடிகின்றது. தோழி, தலைமகன் தலைமகள் இருவரின் அன்புக்கும் உரியவள்; அவ்விருவருக்கும் மாறாக் காதல் வாழ்வு வாய்க்கக் காரணமானவள்; அவ்விருவருக் கிடையே பாலமாய் அமைந்து அவர்தம் வாழ்வு சிறக்கப் பாடுபடுபவள். அவளது பண்புகளில் குறிப்பிடத்தக்கவை ஊடல் கொண்ட தலைமகனை ஆற்றுவிப்பதும் வரையாது வந்தொழுகும் தலைமகளை வரைதலுக்குத் துாண்டுவதும் ஆகும். பின்வரும் குறுந்தொகைப் பாடல் ஊடல் தணிவிக்கும் வாயிலாகத் தோழி ஒளிர்வதைக் காட்ட வல்லது.

கன்னலங் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவியஃ தெவனோ அன்பிலங் கடையேே

இதன்கண் தோழி தலைமகன் அன்னையாகவும் அத்தனாக வும் கருதத்தக்கவர். அவரால் நம் நலமும் அழகும் சிதைந்து சிறப்பு நேரினும் அவரிடம் புலவிகொள்ளுதல் கூடாது என அறிவுரை பகர்ந்து தலையை ஆற்றுவிக்கின்றாள். அதே நேரத்தில் தலைமகன் விரைந்து மணம்முடிக்க வேண்டும் இன்றேல் தலைவியின் இளமையும் அழகும் கெடும் என்பதை யும் கு றி ப் ப ா க உணர்த்துகின்றாள். குறிப்பாகப் பேசுதல் என்னும் அரும் பண்பை அக்கால மகளிர் பெற்றிருந்தமையை இப் பாடலால் அறியலாம். தோழி யின் சொல்வன்மைக்கு மற்றுமொரு குறுந்தொகைப்