பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 3 I

பாடல் சான்றாகின்றது. வரைவு நீட்டித்த தலைவனை நோக்கிக் கூறப்பெற்ற இப்பாடலில் தலைவியின் பண்பு நலம், தோழியின் பண்பட்ட பேச்சுநலம் ஆகியன ஒருங்கே வெளிப்படுகின்றன.

தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட்டு அன்னா வென்னும் குழவி போல இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும் கின் வரைப் பினள் என் தோழி தன்னுறு விழுமங் களை ளுரோ விலளே’

என்னும் இப்பாடலின்கண், தாய் அடித்தாலும் குழந்தை அம்மா அம்மா’ என்றுதான் சொல்லி அழும்; அது தன் தாயைவெறுத்து ஒதுக்கி விடுவதில்லை. அதுபோல நீ தலைவிக்கு இனியவை செய்தாலும் இன்னாதவை செய்தாலும் அவளுக்கு அடைக்கலம் உன்னைத் தவிர பிறர் இல்லை; அவளது துயரை நின்னையன்றிப் பிறர் எவரும் போக்கலர் என்று தருக்க நெறியோடு கூடிய வேண்டுகோளை மொழியும் தோழியின் பண்பைப் பார்க்க முடிகின்றது. அத்துடன் பண்டைத் தமிழ் மகளிர் தம் காதலரைத் தாய்” என்னும் உயர் நிலையில் கருதி அவரே தமக்கு எல்லாம் என்று எண்ணிய பாங்கினயுைம் இப் பாடலின் வழி உணரலாம். ஆடவரின் பீடுநடைக்குப் பெருங்காரணமாக (த்ெதகு பெண்களே விளங்குவர் என நம்மை எண்ணத்

நாண்டுகின்ற பாடலாக இஃது அமைந்துள்ளது.

இனி, வறுமையிலும் செம்மையான வாழ்வு வாழ்ந்த பெண்டிரின் அருங்குணச் சிறப்பைக் காணுதல் இன்றியமை யாதது. நற்றிணை தலைவியொருத்தியின் பண்பை அவளது செவிலித்தாய் புகழ்ந்துரைக்கின்றாள்:

பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர் பொற்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பில் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்