பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

உண்னென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணிர் முத்தரிப் பொன் சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அரிகரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரிமெலிந் தொழியப் பந்தர் ஓடி ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்த னள்கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளான் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே:

இப்பாடலில் அக்கால மகளிரின் குறிப்பாகத் தலைமகளின் உயிர்நிலைப் பண்பு வெளிப்படுகின்றது. என் மகள் சிறியவளாக இருக்கும் பொழுது பொற்கலத்தில் பால்சோறு ஏந்தி உண்ணுக உண்ணுக’ என நான் திரும்பத் திரும்பக் கூறியும் ஏற்காது விளையாட்டிலேயே காலத்தைக் கழித்தாள். இப்பொழுது கணவன் வீட்டிலே வறுமையுற்ற நிலையில் தன் தந்தை கொடுத்தனுப்பிய செல்வத்தை ஏற்காது ஒரு பொழுது விட்டு ஒரு பொழுது உண்ணுகின்ற வறுமைச் சூழலில் வாழ்கின்றாள்; இதற்கு அறிவும் ஒழுக்கமும் அவள் எங்கிருந்து பெற்றாள் என வியந்து வினவுவதிலிருந்து தலைமகளின் செம்மார்ந்த வாழ்வினை பிறர்தர ஏற்றுக் கொள்ளாத உயரிய பண்பினை அறிய முடிகின்றது.

அடுத்து, விருந்தோம் பல் என்னும் பண்பு சங்க இலக்கிய மாந்தரிடம் செறிந்திருந்தமை உணர்தற்குரியது. சங்ககால மகளிர் நள்ளிரவில் விருந்தினர் வந்தபோதும் முகம் மாறுபடாது இனிமை நிரம்ப அவர்களை எதிர்கொண்டு அழைத்து உபசரித்தனர். இதனை,

அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியள் குறுமகள்'