பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

போர்கள் பல நிகழ்ந்தன. வஞ்சினம் கூறும் வழக்கமும் இதனடிப்படையில் தோன்றியதெனலாம். பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்து வரும் பகைவர்களை வெட்டிச் சாய்த்து வெற்றி கொள்ளாவிடில்,

மாங்குடி மருதன் தலைவனாக புலவர் பாடாது வரைக என்கிலவரை

என வஞ்சினம் உரைத்து அவ்வாறே வெற்றியும் பெற்றான் என அறிகிறோம். இத்தகு வீரவுணர்வு ஆண்களிடத்தில் இருந்தது போன்றே பெண்டிரிடத்திலும் இருந்தது. நாட்டைக் காக்க வேண்டிப் போரில் மடிந்த தன் தமையனை யும் கணவனையும் எண்ணிக் கலங்காத மறக்குலப் பெண் ணொருத்தி தன் ஒரே மகனையும் போருக்கனுப்பி வைத்த செய்தியைப் புறநானுாறு புகல்கின்றது.

இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் விே ஒருமகன் அல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே”

என்னும் பகுதியில் சிறுவயது மகனையும் செருக்களத்திற்கு அனுப்பும் மறக்குல மாண்பு பளிச்சிடுகின்றது.

விரமில்லா இளைஞரை இக் கால மகளிர் வெறுத்தனர்: குறிப்பாக முல்லைநில மகளிர் வலிய, கொல்லும் தன்மையை யுடைய காளையை அடக்க இயலாத ஆண்மகனை அடுத்த பிறவியில் கூட ஏற்க முன்வருவதில்லை என்னும் கருத்து காணப்படுகின்றது.

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’

என்பதில் வீரப் பண்பை விரும்பும் மகளிரைக் காணலாம். எனவே, அக் காலத்தில் வீரவுணர்வு ஒரு மானிடப் பண்பாக