பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 35

ாற்றம் பெற்றிருந்தமையும் அது மகளிரிடத்தும் குடிகொண்டி ருந்தமையும் தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கவையாகும்.

ெ ாருளிட்டல்

சங்க காலத்தில் பொருளிட்டி வாழும் வாழ்க்கை போற்றப்பட்டது. வாழ்வின் தேவைகளை நிறைவு செய்வதற்கு வேண்டிய செல்வத்தை ஒவ்வோர் ஆடவனும் முயன்று ஈட்ட வேண்டும். அவ்வாறன்றிப் பிறர் உழைப்பில் வாழும் வாழ்க்கையைப் பெருமையற்ற வாழ்க்கையாகக் கருதினர். இது பற்றியே,

வினையே ஆடவர்க்கு உயிர்

என்னும் சீரிய கருத்தும் எழுந்தது. மேலும்,

உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு”

ான உழைக்காத வாழ்வையும், பொருள் இல்லாத வாழ்வை யும் இழிவாகக் கருதினர். செறுநர் செருக்கழிக்கும் எஃகாக விளங்கும் பொருளை ஈட்ட வேண்டி ஆடவர் அகல்வதை

அவர்களுக்குரிய பண்பாகக் குறிப்பர். இதனை,

செயல்படு மனத்தர் செய்பொருட்கு

அகல்வர் ஆடவர் அது.அதன் பண்பே’ _ன்னும் பாடற்பகுதி சுட்டும். எனவே, பொருளிட்டல் _ன்னும் வினை ஒரு பண்பாகப் பண்டைக் காலத்தில்

கருதப்பட்டமை போதரும்.

Jo’s,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு