பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மண்ணில்நல்லவண்ணம் வாழலாம்

எனச் செல்வத்தின் சேகரிப்பையும் அது செலவழிக்கப்படும் முறையையும் கூறுவார் வ ள் ளு வ ப் பெருந்தகை. இயற்றல், ஈட்டல், காத்தல் இம் மூன்றுடன் பொருளின் பெருமை நின்று விடுவதில்லை. காத்தவற்றை முறையாகச் செலவிடுதல் இன்றியமையாதது. அத்தகு செலவினங்களுள் ஒன்றுதான் ஈகைப் பண்பு. செல்வத்தின் பயன் பிறர்க்குக் கொடுத்தலாகும். இதனை நக்கீரர் என்னும் புலவர்,

செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புரு பலவேகை

என மிகத் தெளிவாகச் சுட்டியுள்ளார். பண்டைத் தமிழர் தாம் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை இரவலர்க்கு இல்லையென்னாது வழங்கி இன்புற்றனர். தமிழக மன்னர் களிடம் இப் பண்பு மேலோங்கியிருந்தது.

ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம் பலநாள் பயின்று பலரோடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ ே

என அதியமானின் அருங்கொடைச் சிறப்பை ஒளவையார் எடுத்தியம்புகின்றார். எத்தனை முறை சென்றாலும் இல்லை யென்னாது கொடுக்க விரும்பும் பண்பை அதியனிடத்துக் காண்கிறோம். மேலும்,

உண்டாயிற் பதங்கொடுத்து இல்லாயின் உடனுண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன்’

எனவும் அதியனின் விருந்து புரந்தரும் மாண்பைப் புகழ் கின்றார் ஒளவையார் முடிகெழு வேந்தரிடமும் காணுதற்கரி தாகிய ஈகைப் பண்பைக் கடையெழு வள்ளல்களிடம் காணலாம். பாரி, ஆய், குமணன், பேகன் முதலானவரின் ஈகைச் சிறப்பைப் புலவர் பெருமக்கள் போற்றிப் பாடி யுள்ளனர். சேர மன்னவன் ஒருவன்,