பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 37

கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்.”

எனப் புகழப் பெறுகின்றான். மற்றொரு சேரவேந்தன் இரவலரைத் தேடிச் சென்று பொருள் வழங்குதலை ,

வாரார் ஆயினும் இரவலர் வேண்டித்

தேரின் தந்தவர்க்கு ஆர்பதன் நல்கும்.” எனவரும் புகழுரையால் அறியலாம். இவ்வாறு மன்னர்கள் பலரும் தம்மை நாடி வந்தவர்க்கு வேண்டுவன வழங்கி மகிழ்ந்தமை பண்டைத் தமிழ் இலக்கியப் பாக்களின் துணையால் அறியலாகின்றது.

மன்னரையும், பிற புரவலரையும் நாடிச் சென்று பரிசில் பெற்றுவரும் புலவர்களும் தம்மிடமுள்ள பொருளை நாளைக்குத் தேவைப்படுமே என எண்ணிச் சேர்த்து வைக்காது இல்லாதவர்க்கு வழங்கிய திறத்தையும் புறநானூற்றுப் பாடல்வழி அறியலாம். குமண வள்ளலிட மிருந்து பெற்றுவந்த செல்வத்தை,

எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே80

எனப் புலவர் பெருஞ்சித்திரனார் தம் மனைவியிடம் கூறுவது இதனை மெய்ப்பிக்கும்.

இரத்தல் இழிவானதாகவும் இரப்பவர்க்கு இல்லை யெனல் அதைவிட இழிவாகவும் கருதப்பட்ட சூழலை,

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று’

என்னும் பாடற்பகுதி உரைக்கின்றது. இதனை நன்குணர்ந்த நிலையில் பழந்தமிழர் தம்மிடம் வருவோர்க்கு வழங்கி பின்புற்றனர். எனவே அவர்களிடம் ஈகைப் பண்பு மேலோங்கியிருந்ததென ஐயத்திற்கிடமின்றி உரைக்கலாம்,