பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 39

வாழ்வியல் உண்மைகள்

நம் முன்னோர் வாழ்க்கை என்னும் அனுபவத்தில் பிறந்த உயரிய உண்மைகள் பலவற்றை எந்நாளும் நிலைத் திருக்கவல்ல, மனித வாழ்வைச் செம்மைப்படுத்தி மேம்படுத்த வல்ல சீரிய கருத்துகள் பலவற்றை எளிய தமிழில் இனிய பாடல்களில் பொதிந்து வைத்துள்ளனர். ஈராயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்ட வரலாற்றையுடைய தமிழர்களின் பண்பாட்டுச் செல்வமாக அக்கருத்துகள் நின்று நிலவு கின்றன. அவை மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுவான, மனித சமுதாயம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்க அறநெறி சார்ந்த அருங்கருத்துகளாகும்.

சொல் திறம்பாமை-அதாவது சொன்ன சொல்லி லிருந்து வழுவாமை என்பது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய பண்பாகும். இதனை,

கிலம் பெயரினும் கின்சொற் பெயரல்ே

என்னும் தொடர் வலியுறுத்துகின்றது. நன்றி மறப்பது ஒரு பாவமான செயல்; நன்றி மறந்தவனுக்கு உய்தி கிடையாது என்பது அக்கால அறம்.

கிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்றே”

எனச் செய்நன்றிச் சிறப்பைக் கூறுகின்றது புறநானூறு. சொன்ன சொல் வழுவாதிருத்தல் போன்றே சொல்லும் சொல்லை வாய்மையுடையதாகச் சொல்லுதல் ஒரு சிறந்த பண்பாகும். புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய் யுரைக்கலாம் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. சங்கப் புலவர் ஒருவரும் இக்கருத்தைச் சற்று மாற்றி,