பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 41

வினைப் பயனில் நம்பிக்கை கொண்டிருந்தமை தெளிவுறு கின்றது.

வினையின் நீங்கி விளங்கிய அறிவனாகிய செவ்வேள் முருகனைச் சிந்தையுள் இருத்தி வழிபடும் பழந்தமிழர்,

  1. * * * * * * * யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல கின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர் கடம்பின் ஒலிதா ரோயேன் என அருளையும் அன்பையும் அறனையும் மட்டுமே வேண்டு கின்றனர். பொன், பொருள், போகம் வேண்டாத அவர்தம்

அருட்பண்புக்கு இஃது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அடுத்து, வாழ்வின் உண்மைகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துரைக்கும் கணியன் பூங்குன்றனாரின் பாடல் பழந்தமிழ்ப் பண்பாட்டு நிலையை உலகிற்கு எடுத்துக் காட்டும் உயரிய பாடலாக விளங்குகிறது. இதன்கண் இடம் பெற்றுள்ள கருத்துகள் யாவும் அனுபவப் பிழிவெனக் கொள்ளத்தக்கவை. விரிந்துபரந்த இவ்வுலக மக்களை எல்லாம் உறவினராகத் தழுவிக் கொள்ளும் மனப் பக்குவத்தை இப்பாடல் வளர்க்கின்றது. நன்மையும் தீமை யும் பிறர்தர வருவன அல்ல; அவரவர் செயலால் விளைவன இறப்பெய்தல் புதுமையானதன்று; வாழ்வை இனிது, இன்னாது எனக் கூறாது அமைதல் முதலான கருத்துகள் மனித வாழ்வு உரமும் உறுதியும் பெறவும், மானுடம் போற்றல் என்னும் பண்பைப் பெறவும் உதவுகின்றன.

யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்