பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. புறத்திணை நன்னாகனார் பாடல்கள்

தோற்றுவாய்

பண்டைத் தமிழர்தம் அரசியல் முறையை-பண்பாட்டு வாழ்க்கையை-பொருளாதாரச் செழுமையை-புலவர்தம் உள்ளத்து உணர்வுகளை அறிய உதவும் கருவியாகத் துலங்குவது புறநானூறு. வரலாற்றுக் கருவூலமாகத் திகழும் இப்புறநானூற்றுள் பெரும்பாலான பாடல்கள் கலைஞர்கள் பழுமரம் தேடும்:பறவைகளாவும், மன்னர்கள் அக்கலைஞர் தம் பசிப்பிணி தீர்க்கும் உரவோராகவும் விளங்கினமையைச் சித்திரிக்கின்றன. இன்னணம் பழுமரம் தேடும் புறவை களாய்ப் புரவலர்களை நாடி, அவர்தம் பொன்றாப் புகழ் பாடி, பரிசில் வாழ்க்கை நடாத்தும் நல்லிசைச் சான்றோர் ஒருவரான புறத்திணை நன்னாகனார் பாடல்கள் குறித்து ஆய்வதே இக்கட்டுரை.

புலவர் பற்றிய செய்திகள்

புறத்திணைத் துறையைப் பாடுவதில் வல்லவர். அது பற்றியே இவர் புறத்திணை நன்னாகனார் எனப் பெயர் பெற்றார். பாரி பறம்பின் சுனை, கரும்பனுார் முதலியன இவராற் பாடப்பெற்றன. இவர் நன்னாகனார் எனவும், நன்னாதனார் எனவும் அழைக்கப்பட்டமையை ஏட்டுச் சுவடிகள் குறித்து நிற்கின்றன. இவர் ஒய்மான் நல்லியக்