பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

முன்னே சென்று தான் பெறக் கருதிய பரிசில் இதுவெனக் கூறுவதாம். இதனை,

மண்ணகங் காவல் மன்னன் முன்னர் எண்ணிய பரிசில் இதுவென உரைத்தன்று

என்பதனால் தெளியலாம்.

கரும்பனுார் கிழானைக் கடைநிலைத் துறையில் வைத்துப் பாடுகின்றார். அரண்மனை வாயிலை அடைந்த இரவலன் தன் வருகையை மன்னனுக்கு அறிவிக்குமாறு இரவலனுக்குக் கூறுவது வாயில்நிலை என்னும் துறையாகும். புறப்பொருள் வெண்பா மாலை வாயில் நிலை எனக் கூறுகின்றது. தொல்காப்பியம் கடைநிலை எனச் சுட்டுகின்றது.

புரலவன் நெடுங்கடை குறுகிய என்னிலை கரவின் றுரையெனக் காவலற் குரைத்தன்று

என்பது புறப்பொருள் வெண்பாமாலை.

சேய்வரல் வருத்தம் விட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை

என்பது தொல்காப்பியம்.

பாடல் தலைவர்கள்

புறத்திணை நன்னாகனார் பாடல்கள் நான்கின்

பாட்டுடைத் தலைவர்களாக மூவர் விளங்குகின்றனர். இவர்கள் மூவருமே குறுநில மன்னர்களாக இருந்தவர்கள்.

ஒய்மான் நல்லியக்கோடன் ஒய்மானாட்டு நல்லியக் கோடன் எனவும் வழங்கப்படுவன். பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகத்துலங்கும் சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத்