பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை நன்னாகனார் பாடல்கள் 49

தலைவன். கடையெழு வள்ளல்களுக்கு முற்பட்டவன். இவன் நல்லூர் நத்தத்தனார் புறத்திணை நன்னாகனார் இருவரின் இசைமாலையினைச் சூடியவன். நாகர் வகுப்பினுள் ஒரு பிரிவு எனப்படும் ஒவியர்குடியிற் பிறந்தவன் எனக் கருதப் படுகின்றான். இவன் ஏறுமா நாட்டு நல்லியக்கோடன் எனவும் வழங்கப்படுகின்றான்.

ஒய்மான் வில்லியாதன் ஒய்மான் நல்லியக் கோடனின் வழித்தோன்றல். இவன் இலங்கை என்னும் ஊர்க்கு இறைவன். இவ்விலங்கை மாவிலங்கை என்னும் ஊராகக் கருதப்படுகிறது. இம்மாவிலங்கை புனனாட்டுக்கு வடக்குள்ள அருவி நாடு, அருவா வடதலை நாடு இரண்டும் சேர்ந்த இடமாகக் கருதப்படுகிறது. இவனைப் பாடிய புலவர் புறத்திணை நன்னாகனார் ஒருவர் மட்டுமே.

கரும்பனுார் கிழான் வேங்கடலைக்குத் தலைவன். கரும்பனுார் என்பது தொண்டை நாட்டுத் திருவேங்கடக் கோட்டத்திற்கு அருகில் உள்ள ஒர் ஊர். திருக்கழுக்குன்றத் துக் கல்வெட்டு ஒன்று கரும்பனுரர் வணிகன் ஆதித்த என்று குறிக்கின்றது. இவன் அறத்துறை அம்பி போல் விளங்கு பவன். மண் நாண புகழ் வேட்டு நீர் நாண நெய் வழங்கு பவன். இவன் வள்ளியனாகவும் வலியனாகவும் ஊமையனா கவும் துலங்குமாற்றைப் புறத்திணை நன்னாகனார் தம் பாடல்களில் சிறப்பித்து உரைக்கின்றார்.

பாடல் அமைப்பு

நான்கு பாடல்களின் அமைப்பினை நோக்கும்போது ஒரு பகுதி புலவரின் வறுமையைச் சித்திரிப்பனவாகவும், ஒரு

பகுதி வள்ளலின் சிறப்பினைப் போற்றுவதாகவும் அமைகிறது. வள்ளலைக் காண்பதற்கு முன் தாம் இருந்த நிலை, வள்ளலைக் கண்ட பின்பு தான் பெற்ற வளம்

இவற்றைத் தன் பாடல்களில் தெளிவாகக் காட்டுகின்றார்.

மண்.-4